விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் தீனா.
இவர் நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நம் யாராலும் மறக்க முடியாது.
அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பா பாண்டி, தும்பா, கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அண்மையில் கூட தீனா பிரம்மாண்டமாக கட்டிய புதிய வீட்டின் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வலம் வந்தது
தற்போது என்னவென்றால் இன்னு ஜுன் 1, தீனாவிற்கு திருவாரூரில் கோலாகலமாக திருமணம் என கூறப்படுகிறது.
தீனா திருமணம் செய்யும் பெண் கிராபிக் டிசைனராக இருக்கிறாராம், இது தீனாவிற்கு பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் என்கின்றனர்.
ரசிகர்கள் தீனாவின் திருமண புகைப்படத்திற்காக தற்போது வெயிட்டிங்.