கேரளா – பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவர், இத்தாலி இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வீணா (veena) என்பவர் தனது மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றுள்ளார்.
அப்போது தன்னுடன் விமானத்தில் பயணித்த இத்தாலியை சேர்ந்த டேரியோ (deriyo) என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் தொடர்ந்து கைப்பேசியில் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள். இதனிடையே நட்பாக தொடங்கிய அவர்களது உறவு பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.
அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த வீணா தனது காதலனான டேரியோவுடன் பதிவு திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இருவரும் சில தினங்களுக்கு முன்னர், அவர்களது நண்பர்களின் உதவியுடன் அமெரிக்காவில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் ஊருக்கு சென்ற தம்பதியினர் இருவரும் கேரள கலாசார முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளனர்.
தனது விருப்பத்தை வீணா தனது வீட்டில் தெரிவிக்க வீணாவின் பெற்றோர் மற்றும் சுற்றத்தின் முன்னிலையில் இருவருக்கும் கேரள கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதால், பலரும் இந்த தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.