பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்கள் இணைந்து விடுமுறையை கழித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள். 2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், தற்போது மகன்களுக்கு திருமணமாகிய பின்னர் மாமியார் – மருமகள் தொடர்பு எவ்வாறு இருக்கிறது என்பதை கருவாக கொண்டு சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படியொரு நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை நிரோஷாவுக்கு மகன்களாக நடிக்கும் நடிகர்களுடன் நிரோஷா விடுமுறையை கழித்துள்ளார்.
இதன்போது எடுத்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவ ருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “மகன்களுடன் அவுட்டிங்கா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.