நடிகர் விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகர் தனது மகன் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையை குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத “தளபதி 68” படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் அம்மாவும், திரைப்பட பின்னணி பாடகியான ஷோபா சந்திரசேகர், நேர்காணல் ஒன்றில் தனது மகன் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையை குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது “நான் விஜய்யிடம் ஒருநாள் “விஜய் உனக்கு அம்மாவா ஒரு படம் பண்ண வேண்டும், அம்மா கதாபாத்திரம் ஏதாவது இருந்தால் சொல்லு” என்று சீரியஸா கேட்டேன். இன்னும் தரவே இல்ல. நீங்க எனக்கு அம்மாவா முழு படமும் நடித்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும்.
விளம்பர படம் வேண்டுமானால் நடிக்கலாம். படம் எல்லாம் நீங்க மறந்துருங்க அம்மா. ஸ்டார்ட் கேமரா என்று சொன்ன உடனே எனக்கு உங்களை பார்த்தால் சிரிப்பு வந்துவிடும் ” என்று விஜய் ஒருநாள் சொன்னார். ஆனால் நாங்கள் இருவரும் இனைந்து அம்மா மகனாக ஒரு நகை கடை விளம்பரத்தில் நடித்துள்ளோம், என்று ஷோபா சந்திரசேகர் சிரித்துக்கொண்டே பேட்டியளித்துள்ளார்.

