தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் நிலையில், 23 பேர் கொண்ட அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர்
இதனிடையே, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பட்டியலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தவெக ஆதரவு கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.

