வவுனியாவில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்தது.
எரிபொருள் நெருக்கடியால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வருவதில் பெற்றோருக்கு பொது போக்குவரத்து சேவையினருக்கும் ஏற்பட்ட இடையூறின் காரணமாகவே மாணவர்களின் வரவு குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆசிரியர்களின் வரவும் குறைந்து காணப்பட்ட நிலையில் வினாத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை கடமைக்கு செல்லும் அரச ஊழியர்களும் பொதுப்போக்குவரத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது.