வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (24.06) வெளியாகின.
அதில் மதவுவைத்தகுளம் பகுதியில் ஒருவருக்கும், நந்திமித்திரிகம பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியில் நான்கு பேருக்கும்,
பெரியகோமரசன்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ரம்பாவ பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், மறவன்குளம் பகுதியில் இருவருக்கும், மணியர்குளம் பகுதியில் மூவருக்கும், சகாயமாதாபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்