வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதனையடுத்து தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வனப் பகுதியிலிருந்து புகை வருவதனை அவதானித்த அயலவர்கள் அருகே சென்று பார்வையிட்ட சமயத்தில் வனப்பகுதி தீப்பற்றி ஏரிந்து கொண்டிருந்துள்ளது.
அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வவுனியாவில் நிலவிவருகின்ற வெப்பநிலையினால் காட்டுத்தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.