2021 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவானது அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை கடந்த 24ஆம் திகதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போதே கணக்காய்வாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.