வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று(சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின் பஸ்நாயக்க நிலமே டிஷன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இறுதி நாள் பெரஹர 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறும் எனக் கூறிய அவர் இம்முறை உற்சவம் மக்கள் பங்களிப்பின்றி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பெரஹராவில் யானைகள், நாட்டியங்கள் உள்ளிட்ட கலாசார அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் எனவும் அவை சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.