இன்றைய மக்களின் உணவுப்பழக்கவழக்கத்தால் பல நோய்களுக்கு உள்ளாகும் நிலையில் அனேக மக்கள் பாதிக்கப்பட கூடிய வயிற்றுப்புண்ணிற்கான மருத்துவ விளக்கத்தை பார்கலாம்.
நாம் அடிக்கடி குடிக்கும் காபி மற்றும் அதிக காரம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது இது குடல் புண்ணிற்கு வழி வகுக்கிறது.
உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதிலுள்ள உட்சுவரில் ஏற்படும் புண்களையே, குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.
இதில், இரைப்பையில் ஏற்படுகின்ற புண்கள் என்றால், அதற்கு கேஸ்ட்ரிக் அல்சர் என்பார்கள். உணவுப்பாதையில் புண்கள் ஏற்பட்டால், அதற்கு ஈசோபேகல் அல்சர் என்பார்கள்.
சிறுகுடலின் முன்பகுதியில் புண்கள் ஏற்பட்டால், அதற்கு டியோடனல் அல்சர் என்பார்கள். இதற்கு பேரிக்காய் மற்றும் வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகமாக உள்ளதால் இத வயிற்று எரிச்சலை குறைக்க உதவும். தினம் உண்ணும் உணவில் நிறைய தயிர் சேர்த்து கொள்வதால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தயிர் தடுத்து நிறுத்திவிடும்.
அத்துடன், வயிற்றுப்புண்களும் மெல்ல ஆற துவங்கும். தயிர் போலவே, குளிர்ந்த பாலும் வயிற்று புண்களை போக்குகிறது. அரை கப் குளிர்ந்த பாலில், சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து குடிக்கலாம்.
அல்லது குளிர்ந்த பாலில் சம அளவு தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். பசும்பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வந்தாலே, வயிற்று புண்கள் குணமாகும்.