தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சுமதி.
குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சுமதி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர், என்னுடைய சொந்த ஊர் சேலம் அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி. சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஏழைக்குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். நானும் என் கணவரும் வேலை தேடி சென்னைக்கு வந்தோம்.
இரண்டு பேருக்கும் வேலை இல்லை அதே சமயம் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் என்பதற்காக அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்தேன்.
அப்போது எனக்கு மாதம் 400 ரூபாய் சம்பளம் தான் கிடைத்தது. இதையடுத்து, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் கொஞ்சம் பயம் இருந்தது.
நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த பிறகு தான் நான் பிரபலமானேன். அவருடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன் இருப்பினும் எங்களுக்கு உதவி செய்ய மறந்துவிட்டார் என்று நடிகை சுமதி கூறியுள்ளார்.