விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது லியோ படம். இதில் 40 வயது உடைய ஹீரோ ரோலில் தான் விஜய் நடிக்கிறார். காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்கில் விஜய்யின் கெட்டப் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தது.
மேலும் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சஞ்சய் தத் தான் லியோ விஜய்யின் அப்பா ரோலில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இருவருமே கேங்ஸ்டர்கள் எனவும் தகவல் வந்திருக்கிறது.
வைரலாகி வரும் இந்த தகவல் தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது.