லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க அண்மையில் பதவி விலகியிருந்தார்.
நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தெஷார ஜயசிங்க தமது கடிதத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜித ஹேரத் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.