ராஜபக்சாகளை துரத்துகின்றோம் என்கின்ற போராட்டம் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. இதனால் மக்கள்பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்க தொடங்கிவிட்டனர்.
இது ராஜபக்சாக்களுக்கு இறுதியில் சாதகமாகவே முடியும். போராட்டத்தின் தீவிர தன்மை குறைந்து நீர்த்துபோகும் நிலை ஏற்படலாம். இதைதான் அவர்கள் எதிர்பார்கின்றனர். பிரச்சினையை தற்காலிகமாக சமாளிக்க அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சினை போன்று நாடகமாடுகின்றனர்.
இவர்களுக்கு அவர்களின் 11 கட்சி கூட்டாளிகள் இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்றுள்ளனர். இந்த 11கடசி தலைவர்களும் ராஜபக்சாக்களுக்கு எதிராக பேசிவருகின்றனர். ஆனால் அவர்களின் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் ராஜபக்சாக்களுக்கு தீவிர விசுவாசமாக இயங்கிக்கொண்டுள்ளனர்.
அடுத்த தேர்தல் வரை பொறுமையாக இருந்து தேர்தலில் தோலவியடையச்செய்து அவர்களை வெளியேறலாமே?. அதுவரை ராஜபக்சாக்களுக்கு எதிரான போராட்டம் என்று குற்றுயிராக இருக்கும் நாட்டை ஏன் கழுத்தை நெறிக்க வேண்டும்?