தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிகர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.
நட்சத்திர தம்பதிகளாக விளங்கிய இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சந்தோசமாக வாழ்ந்து வந்த இரண்டு பேரும் ஜனவரி மாதம் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மட்டுமல்லாது திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விவாகரத்து அறிவிக்குப்பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் படுபிஸியாக இருந்து வருகின்றனர். விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறினார்.
இருவரும் குழந்தைகளுக்காக அல்லது அப்பாவுக்காக சேர்த்துவிடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்துகொள்வதாக கிசுகிசு ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது.
அதாவது, விவாகரத்துக்கு முன் இருவரும் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். அந்த வீட்டில் இருவரும் அடிக்கடி சென்று வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து மகிழ்ச்சியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜூலை 28 தேதி தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து பிறந்தநாளை கொண்டாட உள்ளதாகவும், குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று இருவரும் இணைந்துவிட்டோம் என்று அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.