வாக்குச்சாவடியில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்து வைத்திருந்த நடிகர் அஜித்குமார், சற்று நேரம் கழித்து மன்னிப்பு கேட்டு திருப்பி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தனர்.
சென்னை திருவான்மியூரில் தனது வாக்குச்சாவடிக்குள் நுழைந்தபோது, ரசிகர் ஒருவர் முகக்கவசம் அணியாமல், அஜித்துக்கு நெருக்கமாக நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்.
Sorry sorry !!
This man is all class. 😍#Valimai#TamilNaduElections2021 pic.twitter.com/dIR5LRxl57
— Tro Lee (@trolee_) April 6, 2021
எதிர்ச்சியாக பார்த்த அஜித், கோபமடைந்து அவரது போனை வேகமாக பறித்தது வைத்துக்கொண்டார். அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
ஆனால், சிறிது நேரத்தில் பறித்து வைத்திருந்த செல்போனை ரசிகரிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். அப்போது அவரை, இனி இப்படி செய்யவேண்டாம் ‘லாஸ்ட் வார்னிங்’ என எச்சரிசித்துள்ளார்.
மேலும், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டு செல்லும் போது, அந்த ரசிகரிடம் அவர் ‘சாரி’ கேட்டு சென்றுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது.
#ThalaAjith Requested His Fans To Wear Mask!☺
Nice gesture by him ❤👌#Valimai #AjithKumar pic.twitter.com/rP8dVdpmbU
— Ajith Seenu 2 👑 தல..தாய்..தாரம்..²⁸ʸʳˢᴼᶠᴬʲⁱᵗʰⁱˢᵐ (@ajith_seenu) April 6, 2021