யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி காவல்துறை பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதியும், மண்முனை காவல்துறை பிரிவின் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குருநாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.