யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாம் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபடுவதற்கு பாடசாலைக்கு வர எரிபொருள் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் தமக்கு எரிபொருள் கிடைக்கும் வரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், எரிபொருள் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.