யாழ்.தென்மராட்சி – நுணாவில் பகுதியில் குழந்தை பிறந்த 28 நாட்களான நிலையில் தாய்க்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த தாய் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை கிடைத்தவுடன் வீடு சென்றுள்ளார்.
பின்னர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குறித்த தாய் மாற்றப்பட்டுள்ளார்.