யாழ்ப்பாணத்தில் உள்ள வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த கூட்டத்தில் எம்.ஏ சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர்.
இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிசார் கேள்வி கேட்டவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து எம்.ஏ சுமந்திரனை ஆதரவாளர்கள் அழைத்துச் சென்று பாதுகாப்பாக அனுப்பி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.