யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். மேலும் வழக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 4 பெண்களும் 2 ஆண்களுமாக 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.