யாழில் சில தினங்களுக்கு முன்னர் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூதாட்டியை கடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை முடிவில் தெரிவித்துள்ளனர்.
சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.