யாழில் 9 வயதான சின்னம் சிறு மாணவியை கொடூரமாக தாக்கிய மண்கும்பான் பாடசாலை அதிபருக்கு உளவள சிகிச்சை தேவை என ஊர்காவற்துறை நீதிபதி கூறியுள்ளார்.
நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மாணவியை தாறுமாறாக அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை முற்படுத்தப்பட்ட போதே அதிபர் தெரிவித்துள்ளார்.
எஸ் லோன் பைப்பினால் மாணவியை 20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் நலனுக்காக மேலதிக வகுப்பு நடத்தியாகவும், அப்போது ஒரே விடயத்தை 3 தடவைக் சொல்லியும் தவறிழைத்ததால், நிதானமிழந்து மாணவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் அதிபர் தெரிவித்துள்ளார்.
நிதானமிழப்பதும் ஒரு வகை நோயே, இதற்கு உளவள சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்திய நீதவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் அதிபரை விடுவித்து, வழக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இதேவேளை, மண்கும்பான் பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய 9 மாணவிகளையும் அதிபர் அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது