26/01/2022
யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்! இரவில் நடந்த பயங்கரம் (Photo)
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்த வாகனம் நேற்று இரவு 10.45 மணியளவில் (25.01.2022) விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பிரபல தனியார் ஹொட்டலில் இருந்து வைத்தியர்கள் சிலர் குறித்த காரில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எனினும் விபத்தின் போது சிறு காயங்களுடன் தப்பினர். இவ்வாறு காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒருவரை நோயாளர்காவு வண்டியில் ஏற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.