யாழில் இடம்பெற்ற குடும்பத்தகராரில் போத்தலை உடைத்து தாக்கியதில் இரு குடும்பஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது கடந்த புதன் யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரு குடும்பஸ்த்தர்களுக்கும் வேறு இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் குடும்பஸ்த்தர்கள் மீது போத்தலை உடைத்து குத்திய நிலையில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.