யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று, நவாலி வடக்கு திருச்சபை வீதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
அதன்பின்னர் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

