யாழிலுள்ள கச்சேரிக்கு அருகாமையில் செல்லும் புறுாடி வீதியில் நள்ளிரவு வேளையில் வீடு புகுந்து தொடர்ச்சியாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைபாடு அளித்தும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
மூன்று மாதங்களுக்குள் ஒரே வீட்டில் இரண்டு தடவைகளுக்கு மேல் நள்ளிரவு கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
சிசிரிவி கமராக்கள் பொருத்தினாலும் குறித்த கமராக்களின் வயர்களை அறுத்து தொடர்பை துண்டித்த பின்னர் கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள்.
குறித்த வீடுகளில் இதுவரையில் லட்சக்கணக்கான பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கொள்ளையர்களின் தொடர் செயற்பாட்டை பார்க்கும் போது ஒரு சில பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் தொடர்புகள் பேணப்படுகின்றதாக சந்தேகம் தோன்றுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.