யாழில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் நெருப்பால் சூடுவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கை, முகம் எனப் பல இடங்களிலும் காயங்கள் காணப்பட்டதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு தீக் காயத்திற்கு இலக்கான சிறுவன் அந்தத் தீப்புண்ணுடன் நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அவதானித்த ஆசிரியர்கள் அவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவனிடம் வாக்குமூலம் பெற்று சட்டநட வடிக்கைகளை பொலிஸார் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
விசாரணையின்போது தனது கணவரைப் பாதுகாக்கும் நோக்கில் தானே மகனுக்குச் சூடுவைத்தார் என்று தாயார் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.