யாழ்ப்பாணம் பண்ணாகம் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆவா குழுவினரை அப்பகுதி இளைஞர்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குடாநாட்டில் வாள்வெட்டுகுழுவின் தொல்லைகள் அண்மைகாலமாக ஓரளவு குறைந்திருதாலும் ஆங்காங்கே அவர்கள் மக்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை சீரழிக்கவென்றே வந்தவர்கள் இவர்கள் என சமூகஆர்வலர்கள் பலரும் சபித்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பண்ணாக பிரதேசத்திற்குள் நுழைந்த ஆவா குழுவை கிராமமக்களும் அவ்வூர் இளைஞர்களும் நையப்புடைத்துள்ள சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்றையதினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு அவரது மகன்மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.