திருகோணமலை நிலாவெளிக் கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் யாழ் குப்பிழானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12.03.2021) ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.இருவர் கா.ணாமல் போயிருந்த நிலையில் நிலையில் ஒருவர் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார். மற்றொரு இளைஞன் கடல் அலையில் அ.டித்துச் செல்லப்பட்டுக் கா.ணாமல் போயுள்ளார்.
இதேவேளை, கடல் அலையில் தத்தளித்த இருவர் மீ.ட்கப்பட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழை சேர்ந்த 20 வயதான டினோஜன் மற்றும் வலிகாமம் தெற்கு பகுதியை சேர்ந்த 21 வயதான கபில் என்பவருமே மீ.ட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் குப்பிழான் மற்றும் வேறு இடங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைந்து நேற்றுமுன்தினம் சிவராத்திரி வழிபாட்டிற்காக திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நிலையில் நேற்றையதினம் மேற்படி நிலாவெளிக் கடலில் குளிக்கச் சென்ற போதே குறித்த அனர்த்தம் நடந்துள்ளது.குறித்த சம்பவத்தில் குப்பிழான் தெற்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெளதமன் (வயது-21) என்பவரே ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.
குப்பிழான் வடக்கைச் சேர்ந்த சிவச்சந்திரன் சிந்துஜன் (வயது-21) என்பவரே கா.ணாமல் போனவராவார். இதேவேளை , மேற்படி சம்பவம் தொடர்பில் குச்சவெளிப் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்