யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.