கொழும்பு – டாம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் ஒருவரது சடலம் இந்த பொதியை கொண்டுவந்த சந்தேக நபரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர்.டாம் வீதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளிகளை அடிப்படையாக வைத்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.குறித்த சந்தேக நபர் ஹங்வெல்ல பிரதேசத்திலிருந்து 143 இலக்க போக்குவரத்து தனியார் பஸ் ஊடாக இந்த பொதியை புறக்கோட்டைக்கு கொண்டுவந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பையில் இருந்த பெண் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.இதேவேளை ஹங்வெல்ல நகரில் பெண் ஆடைகள் சிலவற்றுடன் பொதியொன்றை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆடைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட யுவதியினுடையதா என்பது பற்றி இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.அதேவேளை, ஹங்வெல்ல நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நீரியப்பொல பிரதேசத்தில் வைத்து ஆண் ஒருவரது சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்