மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட எம்.பியான எம்.சாமர சம்பத் தசநாயக்க, வெல்லவாயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது முட்டைவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது