மனிதர்களுக்கு எந்த நோய் வந்தாலும், உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அது சங்கடத்தையே தரும். எனவே, ஆரோக்கியமான உடல்நலனையே அனைவரும் விரும்புவர். நமது முன்னோர் தற்போது உள்ள நவீன மருத்துவமோ, மருந்துகளோ இல்லாத நிலையிலும் கூட ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்தனர்.அதற்கு காரணங்களில் ஒன்ற, கடுமையான உடல் உழைப்பு, மற்றொன்று ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவு முறை.
ஆதிமனிதர்கள் மருந்தே உணவாகவும், உணவே மருந்தாகவும் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். தங்கள் வீடுகள் அருகிலேயே செடிகள், கொடிகள், அனைத்தின் மருத்துவ மற்றும் மூலிகை குணங்களை அறிந்து அவற்றை காலக்கிரமத்தில், உணவோடு சேர்த்து பயன்படுத்தி வந்தவர். அதிலொன்று தான் காட்டுக்கீரைகளை கண்டறிந்தது. அதில் வெட்டுக்கீரை, தும்பை, குப்பை மேனி, துத்தி, அகத்தி, வல்லாரை என்று அநேகம் உண்டு
.
துத்தக்கீரையானது மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நவீன மருத்துவத்தில் மூலநோயை குணமாக்க, ஒரே வழி அறுவைசிகிச்சை தான் என்கின்றனர் அலோபதியில். ஆனால் மூல நோய் கிருமிகளை வயிற்றிலேயே அழிப்பதற்கு துத்தி இலைகளை அரைத்து, தினமும் காலையில் 7 நாட்களுக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருந்தி வந்தால், எளிதில் குணமாகும். பின்னர் வாழ்நாளில், அந்த மனிதனை மூலநோய் அண்டவே அண்டாது.
துத்திக்கீரை: இக்கீரை எளிதில் எங்கும் கிடைக்கக்கூடியது. இதயத்தின் வடிவத்தில் இருக்கும். அதன் பச்சை இலைகளை சேகரிப்பது மட்டுமே நமது பணியாகும். அதாவது, துத்தி இலைகளை 200 கிராம் சேகரித்து, 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, துவரம்பருப்பு 3 சிட்டிகை கலந்து, மிளகுத்தூள் அரை சிட்டிகை, சீரகம் ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் 3 சிட்டிகை சீரகம் ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் 3 சிட்டிகை கலந்து எளிதில் செய்யலாம்.
செய்முறை: முதலில் துத்திக்கீரையை பொடிப் பொடியாக நறுக்கி, சிறிய வெங்காயத்தை அரிந்து அதில் போட்டு வைத்துக் கொள்ளவும். முதலில் நல்லெண்ணெய் சீரகத்தை வாணலியில் போட்டு சூடாக்க வேண்டும். பின்னர் அதில் கீரை, வெங்காயத்தை போட்டு தேவையான நீரூற்றி வேகவைக்கவும். பி்ன்னர் அதை வாணலியில் போட்டு நன்றாக வதக்கி, துவரை, மிளகுத்தூள் மற்றும் உப்பைத் தூவி இறக்கவும். இதனுடன், நெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் அண்டாது.
துத்திக்கீரை தோசை: நகர்புற மனிதர்களுக்கு பச்சையாக துத்தி இலைகளை அரைத்து கஷாயம்போல் குடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால், அதனை தோசையாக்கி உண்ணலாம் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். நரம்புகளை நீக்கிய துத்தி இலைகளை எடுத்து, அதனை கரைத்த மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம். ஆனால் தோசையாக சாப்பிடும்போது சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். துத்தி இலைத்தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் போதுமானது. அவ்வாறு சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவையும் சரியாகும். உடலின் தசைகளும் பலமடையும் என்கின்றனர், இயற்கை மருத்துவர்கள். எனவே காட்டுக்கீரையிலும் காணக்கிடைக்காத மருத்துவ குணங்கள் இதில் ஏராளமுண்டு.
மூல நோய் வராமல் தடுக்க :
1)உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2)அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும், மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.
3)உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்தல் வேண்டும். கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.
மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:
1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது