புதியதாக மடிக்கக்கூடிய விதத்தில் ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை பெற சாம்சங் நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் தற்போது விண்ணப்பித்துள்ளது.
இவ் விண்ணப்பம் நவம்பர் 2020 வாக்கில் சமர்பிக்கப்பட்டது. இது ஜூன் 3, 2021 அன்று அச்சிடப்பட்டது. காப்புரிமையில் இடம்பெற்று இருக்கும் படங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் மடிக்கும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹின்ஜ் டிசைன் கேலக்ஸி இசட் போல்டு 2 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இவ் ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கும் வகையில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்புறம் பன்ச் ஹோல் கட்-அவுட், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறதாம்.
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
பின்புறம் இரண்டு வெவ்வேறு ஹின்ஜ்கள் இடம்பெற்றுள்ளன.
பேக் பேனலில் மூன்று கேமரா சென்சார்கள், செங்குத்தாக பொருத்தப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஹின்ஜ் கேமரா லென்ஸ்களை கொண்டிருக்கிறது.
இந்த வகையில் ஸ்மார்ட்போன் முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இவை செல்பி கேமராக்களாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.
வலதுபுற ஸ்கிரீன் நடுப்புறமாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது. இடதுபுற ஸ்கிரீன் நடுப்புற ஸ்கிரீனின் பின்புறம் மடிந்து கொள்கிறது.
இவ் ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட், இடதுபுறத்தில் ஸ்பீக்கர் கிரில் உள்ளது. கேலக்ஸி இசட் போல்டு 2 போன்று இல்லாமல், இந்த மாடலின் முன்புற ஸ்கிரீன் சற்றே அகலமாகவும் இருக்கிறது.