அறம், தெறி, மாரி படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
மதுரையைச் சேர்ந்த செல்லதுரை 1963-ல் எம்.ஜி.ஆர். நடித்த பணக்காரக் குடும்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்தார். அந்நியன், சிவாஜி, ராஜா ராணி, கத்தி, அறம், தெறி, மாரி, நட்பே துணை போன்ற படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தன்னுடைய இல்லத்தில் காலமானார் செல்லதுரை. அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.