உணவை வழங்க வந்த Zomato டெலிவரி பாய் வாடிக்கையாளறை இரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நகரமான பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர் இரத்தம் சொட்ட சொட்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட Hitesha Chandranee என்ற அப்பெண் ஒரு ஒப்பனை கலைஞர் என கூறப்படுகிறது.
அவரது பதிவில், தான் ஆர்டர் செய்த உணவு ஒரு மணிநேரம் தாமதமாக வந்ததாகவும், அதனை புகாரளிக்க வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொது டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
View this post on Instagram