முல்லைத்தீவில் வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று (13) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அகற்றப்படாமல் இருந்தது.
தொடர்ந்து இன்றையதினம் (14) காலை மீண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் குறித்த அடையாளங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.