முல்லைத்திவு மாங்குளம் பகுதியில் ஒரு வாரமாக தொடரும் காட்டு யானைகளின் தொல்லையால் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக அப் பகுதி மக்கள் மற்றும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்திவு மாங்குளம் உயிரிளை மற்றும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் பண்ணை பகுதியில் புகுந்த காட்டு யானை பயிர்களையும் உடைமைகளையும் சேதத்துக்குள்ளாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இரவில் நிம்மதியாக கூட தங்கள் பிள்ளைகளுடன் தூங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
காணிக்குள் உள்ள தென்னை, வாழை போன்ற சுமார் பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.