ஜோதிட அமைப்பின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும்.
அப்படி மாறும் போது சில நேரங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டியிருக்கும். அப்படி கிரகங்கள் இணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பெப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் புதனும் கும்ப ராசியில் நுழையவுள்ளார்.
இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த நிகழ்வானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவிருக்கிறது.
இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காலத்தில் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். படைப்புத் துறையில் இருப்பவர்கள் நிறைய முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் போடப்படும் நிதி திட்டங்கள் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தினசரி வருமானத்தில் உயர்வைக் காணக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வணிகர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
சிலர் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயத்தைத் தருவதாக இருக்கும். சுப காரியங்களில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் மற்றும் சனியின் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தம்பதிகளுக்கு இடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
தொழிலில் எதிர்பார்த்தவாறான முடிவுகளைப் பெறக்கூடும்.
பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளதால், தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.