முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக நாட்டின் பலபாகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நேற்றும் தங்காலை கால்ட்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கால்ட்டன் இல்லத்திற்கு சென்றுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் தங்காலை இல்லத்திற்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் குருணாகல் அம்பலாந்தொட்ட ஜா எல உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று கால்ட்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர்
அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.