தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை ஷோபிதா துளிபாலா ஆகியோரின் காதல் விவகாரம் பற்றி தான் கடந்த சில வாரங்களாக கிசுகிசுக்கள் வர தொடங்கி இருக்கின்றது. அவர்கள் வெளிநாட்டில் ஒன்றாக இருக்கும் ஒரு போட்டோவும் முன்பே வெளியாகி வைரல் ஆனது.
அதனால் அவர்கள் டேட்டிங் செய்வது உறுதி என்றே சினிமா துறையில் பேச தொடங்கிவிட்டனர். அவர்களும் அது பற்றி எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஒரு பேட்டியில் ஷோபிதா காதல் கிசுகிசு பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். “தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. நான் எந்த தவறும் செய்யாத நேரத்தில் அது பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும் என ஆர்வம் எனக்கில்லை.”
“அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கு பதில் கொடுப்பதை விட, அவரவர் வாழ்க்கையை பார்க்க வேண்டும்” என ஷோபிதா குறிப்பிட்டு இருக்கிறார்.