இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகியுள்ள 26 வயதான அபிலாஷா பாரக்கிற்கு (Abhilasha Barak) வாழ்த்துகள் குவிந்துள்ளது.
அபிலாஷா பாரக் (Abhilasha Barak) மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானியாக பயிற்சி பெற்றவர் .
அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் (Abhilasha Barak) இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓம் சிங் என்பவரின் மகள் ஆவார்.
தந்தையை போலவே தானும் ராணுவத்தில் சேவை செய்ய விரும்பிய அபிலாஷா இந்திய போர் விமானிகள் பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்று தற்போது பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.கே.சூரி கையால் பெற்றார்.
இந்நிலையில் தந்தையை போலவே நாட்டுக்காக சேவை செய்ய புறப்பட்டுள்ள அபிலாஷா பாரக்கிற்கு ( Abhilasha Barak) வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.