இந்தியாவில் மனைவி மற்றும் குடும்பத்தாரை கொலை செய்த கணவர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் வருண் அரோரா.இவர் தனது மனைவி திவ்யா, மாமியார் அனிதா மற்றும் கொழுந்தியாள் பிரியங்கா ஆகியோருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்துள்ளார்.
இதில் அனிதா மற்றும் பிரியங்கா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் முதலில் அனிதா, அடுத்து பிரியங்கா ஆகியோர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் அவரது மனைவி திவ்யா (35) கோமாவில் உள்ளார்.முதல்கட்ட விசாரணையில் தனது குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கான தனது மனைவியின் முடிவை ஆதரித்ததற்காக வருண், மாமியார் மற்றும் குடும்பத்தார் மீது வெறுப்படைந்து இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்தது.
மேலும், உயிரிழந்த தனது தந்தை தனது குழந்தையாக மறுபிறவி எடுப்பார் என்று அவர் நம்பினார்.ஆனால் அதிர்ஷ்டவசமாக வருண் மாமனார் மட்டும் இதில் இருந்து தப்பியுள்ளார்.இதனிடையில் கைது செய்யப்பட்ட வருண் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் குழந்தை பிறக்காமல் இருந்தது.
இதனால் என் மாமியார், மாமனார் என்னை இகழ்ந்து பேசினார்கள்.இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் செயற்கை முறையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரட்டை குழந்தைகள் என் மனைவிக்கு பிறந்தது.பின்னர் என் மனைவி கடந்தாண்டு இயற்கையாக கருத்தரித்தார். ஆனால் அந்த கருவை கலைத்துவிட்டனர் என கூறியுள்ளனர்.
இதன் காரணமாகவே தங்கள் மீது வருண் ஆத்திரத்தில் இருந்ததாக அவரின் மாமனார் கூறியுள்ளார்.பொலிசார் தொடர்ந்து வருணிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.