பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ.
குரு அளவிற்கு இல்லை என்றாலும் சிஷ்யன் ஒன்றும் சும்மா கிடையாது நானும் பிரம்மாண்டம் காட்டுவேன் என படங்கள் இயக்கி சாதித்த அட்லீ இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இன்று வெளியாகிவிட்டது, படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு அட்லீ-ப்ரியாவிற்கு பிறந்த அவர்களது மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கியூட் மகன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.