துபாயிலிருந்து தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் முகக்கவசத்தில் தங்கத்தை நுதன முறையில் கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து ஃபிளை துபாய் விமானம் மூலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற நபர் சென்னை வந்துள்ளார்.
இவர் விமானத்தில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றபோது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்து தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் பதட்டத்துடன் காணப்பட்ட அப்துல்லா, பதில்கள் தெளிவாக கேட்காததாலும், அவரது முகக் கவசத்தை அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது முகக்கவசம் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்ததால் அவரின் முகக்கவத்தை அதிகாரிகள் கத்தரித்துள்ளனர்.
அப்போது இரண்டு முகக்கவங்களை ஒன்றாக இணைத்து தைத்திருந்ததும், அவற்றின் நடுவே தங்கப் பசை வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ 2.93 லட்சம் மதிப்புடைய 65 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரின் பையிலும், ஐபோன் 12 புரோ 10, பயன்படுத்திய ஐ போன்கள் 8, பயன்படுத்திய மடிக் கணினிகள் 9, 2 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 8.2 லட்சம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முகமது அப்துல்லா மொத்தம் ரூ 11.13 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை கடத்தி கொண்டுவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.