தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் அன்பு செழியனின் மகளுக்கும் சரண் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசனின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் வேறு வேறு தருணங்களில் கலந்துகொண்டதாக தெரிகிறது.
அன்பு செழியன் தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக தொடர்ச்சியாக படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். மேலும் நிறைய படங்களுக்கு அவர்தான் நிதியுதவி அளித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபூரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது