மீண்டும் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது தீர்மானமிக்க பல முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கை அரசியலில் ஸ்திரமற்ற தன்மை காணப்படுகின்றது.
இதனால், இலங்கை அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதேவேளை நேற்றையதினம் சபாநாயகர் மகிந்த யாபா தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.