அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மின் கட்டணத்தை எதிர்காலத்தை பாதிக்க கூடிய விதத்தில் திருத்தம் செய்ய முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை நேற்று (09) தமக்கு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுமார் 45 நாட்கள் ஆகும் என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.